புனேயில் ஒற்றை திரையரங்குகள் மூடப்பட்டது – ஏன் தெரியுமா?

0
133

கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலத்திலும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்கும், திரையரங்குகள் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

சில மாதங்களுக்கு இந்த முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதை தொடர்ந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆரம்ப கட்டத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

சமீபத்தில்தான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சில விதிமுறைகளை பின்பற்றும் படி அரசு அறிவித்திருந்தது நினைவு கூற வேண்டிய ஒன்றாகும்.

கொரோனா அச்சத்தால் திரையரங்குகளுக்கு திரைப்படம் பார்க்க மக்கள் வராததால், புனேயில் 100 இருக்கைகளுக்கு மேல்  இருக்கும் ஒற்றை திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்துடன், பெரிய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபல இயக்குனர்கள் ஆகியோரின் திரைப்படம், திரையரங்குகளில் வெளியிடாத காரணத்தினால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திரையரங்குகளை திறப்பதற்கும், பராமரிப்பு வேலைகளை செய்வதற்கும் போதுமான அளவு பணவரவு இல்லாத காரணத்தினால் திரையரங்குகளை மூடி விட்டதாக திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.  மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலும் ரசிகர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.