வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

0
263
#image_title

வயிற்றில் தேங்கி துர்நாற்றத்தை வெளியேற்றும் வாயுக்கள் வெளியேற இந்த மாயாஜால பானத்தை பருகவும்!

தற்போதையை வாழ்க்கை முறையில் மோசமான உணவுமுறை பழக்கத்தால் குடலில் கெட்ட வாயுக்கள் அதிகம் தேங்கி துர்நாற்றத்தை கிளப்பி வருகிறது. இந்த கெட்ட வாயுக்களை எவ்வாறு வெளியேற்றுவது என்று தெரியாமல் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.

உடலில் கேஸ் தேங்க உணவுமுறை பழக்கம் முக்கிய காரணமாக சொல்லப்படும் நிலையில் எளிதில் செரிக்க கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுதல் நல்லது.

மேலும் வாயுக்களை வெளியேற்ற சில இயற்கை வழிகளை பின்பற்றுவது நல்லது. அந்தவகையில் வாயுக்களை வெளியேற்ற உதவும் சில வீட்டு பொருட்களை வைத்து கசாயம் செய்து சாப்பிடுவது சிறந்த தேர்வாக இருக்கும்.

இதற்கு தேவைப்படும் பொருட்கள்…

*சுக்கு
*ஓமம்
*சீரகம்
*மிளகு
*பட்டை
*கொத்தமல்லி
*வெந்தயம்

கசாயம் செய்யும் முறை…

முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சம அளவு எடுத்து உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி இடித்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

தண்ணீரின் நிறம் நன்கு மாறி வந்ததும் அடுப்பை அணைத்து இளஞ்சூடு வரும் வரை காத்திருந்து வடிகட்டி பருகவும்.

காலை அல்லது இரவு நேரத்தில் இந்த பானத்தை குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.