திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

0
197

பதவி வெறி பிடித்த கட்சி திமுக அவர்களுடைய குடும்பம் உயர வேண்டும் இன்று உழைக்கும் கட்சிதான் திமுக காவல்துறையை மிரட்டும் கட்சிதான் திமுக என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடுக்கடுக்கான புகார்களை திமுகவின் மீது தெரிவித்திருக்கின்றார்.

விழுப்புரம் மாவட்டம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் பங்கு பெற்று ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார் அதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றார்கள் கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது தமிழ் நாட்டின் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்க தொண்டர்களும் நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும் அதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அதிமுகவின் கதை வேஷ்டியை கட்டினால் அனைவருக்கும் தைரியம் வரும் ஆகவே பதவி வெறி பிடித்தவர்கள் திமுகவினர் தங்களுடைய குடும்பம் வளரவே உழைக்கின்றது அந்த கட்சி ஆனால் மக்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு கட்சி அதிமுக காவல்துறை உயர் அதிகாரிகளை மிரட்டும் ஒரு கட்சிதான் திமுக ஆனால் அதிமுக மக்களுக்கான கட்சி மக்களை எந்நேரமும் காக்கின்ற கட்சி குறிப்பாக அதிமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு கிடையாது. அதிமுக மீது மக்கள் மனதில் நல்ல எண்ணங்களே அதிகரித்து இருக்கின்றன அவற்றை நாம் வாக்குகளாக மாற்ற வேண்டும் ஆனால் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது அதிகார துஷ்பிரயோகம் செய்த ஆட்சி தான் திமுக ஆட்சி தமிழ்நாட்டில் 410 ஏழை எளிய மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்கான கனவு நிறைவேறி இருக்கின்றது அது இந்த அதிமுக ஆட்சியால் தான்.

எனவே திமுக தெரியாமல் கூட ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற இயலாது நாம் அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை விரட்டியடிக்க வேண்டும் கழகத்தின் இளைஞர்களை மூத்த நிர்வாகிகள் போட்டியாக நினைக்காமல் அவர்களை தட்டிக் கொடுத்து வேலை செய்ய வழி விட வேண்டும் எப்போதும் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் அடிப்படை கொள்கையில் ஒன்று ஆனால் திமுகவில் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தயாநிதி மாறனுக்கு காவடி தூக்குவதற்கு தான் திமுகவில் இருக்கின்ற உறுப்பினர்களை வைத்திருக்கிறார்கள் அங்கே உழைப்புக்கு மரியாதை இல்லை 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது இளைஞர்கள் மற்றும் பெண்கள் கையில்தான் இருக்கின்றது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மீண்டும் முதலமைச்சராக நாம் அரியணை ஏற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleஅரசியலுக்கு முழுக்கு போடும் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
Next articleசசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here