தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

0
208

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் பெரும்பாலான பகுதிகளில், இடி மின்னலுடன் கூடிய மிதமான லேசானது முதல் மிதமான மழையும் அவ்வப்போது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Previous articleமீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.!!
Next articleவந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here