தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

0
181

தமிழகத்தில் கட்டாயமாக 100% பள்ளிக்கு வர வேண்டும்!! அரசு அதிரடி முடிவு!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் வெகுவாக பாதித்து வந்தது. இந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. அப்பொழுது கடைகள் எதுவும் செயல்படவில்லை. மேலும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. சிறிது காலங்களுக்குப் பிறகு கொரோனா வைரஸ் தொற்று குறைய தொடங்கியதும் மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

மறுபடியும் இரண்டாவது தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன்பின் மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டன. மேலும் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு, தளர்வு ஊரடங்கு போடப்பட்டது, அதன் பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வியாண்டு முழுவதுமாக ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. அதனை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் பொதுத்தேர்வு தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

12 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் டூ தேர்வு முடிவு கடந்த 19ம் தேதி வெளியிடப் பட்டது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடம் எடுக்கும் ஆசிரியர்களை 100% பள்ளிக்கு வரவழைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. மேலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து ஆன்லைன் கிளாஸ் மூலமாக வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க வேண்டுமென்று கூறியுள்ளது.

மேலும், செயல் திட்ட குறிப்பேடுகள் தினமும் எழுதி தலைமையாசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும் என்றும் தெரிவித்து இருக்கின்றது. இது குறித்து அறிவிப்பை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட இருக்கிறார்.