நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

0
277

நாக் அவுட்டில் இந்தியா vs இங்கிலாந்து… அணியில் யார் யாருக்கு இடம்?

இந்திய அணி இன்று இங்கிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணி குறித்த ஊகங்கள் எழுந்துள்ளன.

சூப்பர் 12 லீக் சுற்றில் இந்திய அணி முதல் இடம் பிடித்து அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வென்ற நிலையில் முதல் ஆளாக இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடக்க உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

உலகக்கோப்பையை பொறுத்தவரை இந்திய அணி இங்கிலாந்தை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. ஆனால் இந்த முறை இங்கிலாந்து அணியும் சமபலத்துடன் உள்ளது. அதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் கடைசியாக இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக விளையாடிய அதே அணியோடு விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் தினேஷ் கார்த்திக்கு இன்று ஆடும் லெவனில் வாய்ப்பிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவருக்காக கொடுக்கப்பட்ட வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பேட்டிங்கில் பார்மில் இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.

Previous articleபுயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!
Next articleவாங்க இந்தியா… நாங்ல வெய்ட் பண்றோம்… பாகிஸ்தான் ஆலோசகர் பேச்சு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here