1977 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 16 வயதினிலே. இப்படத்தில், கமல்ஹாசன் , ஸ்ரீதேவி , ரஜினிகாந்த் , காந்திமதி , சத்யஜித் மற்றும் கவுண்டமணி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
80 கால கட்டங்களில் இருந்து சினிமா துறையை பொறுத்தவரையில் ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் அதனை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் மொழிபெயர்த்து தங்களுடைய மொழியிலும் திரையிடுவது வழக்கமான ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதேபோன்று 16 வயதினிலே தமிழ் திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை கண்டதை எடுத்து தெலுங்கு திரை உலகிலும் ரீமேக் செய்யபட்டுள்ளது.
அந்த தருணத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை தெலுங்கு இயக்குனர் ராகவேந்திரா ராவ் அவர்கள் கூறியிருக்கிறார்.ரஜினி, கமல், ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான ’16 வயதினிலே’ படத்தை ‘கரானா மொகுடு’ என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். அப்போது இந்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றியதால் ரஜினி மற்றும் கமல் இருவரும் தன்னை வீடு தேடி வந்து எச்சரித்ததாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் முதலில் தமிழில் எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தேன். எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் எனக்கு கிளைமேக்ஸ் எனக்கு பிடிக்கவில்லை. காரணம் முடிவில் சோகமாக இருந்தது. இந்த வகையான கிளைமாக்ஸை தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் தெலுங்கில் செல்லாது. எனக்கும் தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. எனவே படத்தில் கண்டிப்பாக மகிழ்ச்சியான முடிவு இருக்க வேண்டும் என விரும்பினேன்.
ஆனால் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படத்தின் கிளைமாக்ஸை மாற்றினால் படம் முழுவதும் கெட்டுப்போகலாம். அதுவும் ஆபத்துதான். இருந்தாலும் ரிஸ்க் எடுக்க துணிந்தேன் என்று தெலுங்கு இயக்குனர் ராகவேந்திரா ராவ் அவர்கள் கூறியுள்ளார்.
தெலுங்கு ரீமேக்கின் கிளைமாக்ஸை நான் மாற்றிய கதையை யாரோ கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரிடம் கூறி விட்டனர். இதை அறிந்த ஸ்ரீதேவி ராகவேந்திர ராவிற்கு போன் செய்து சொல்லி உள்ளார். ரஜினிகாந்த், கமல் உங்கள் வீட்டிற்கு வருகிறார்களாம் என்று என்னிடம் கூறினார் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி – கமல் என அடுத்தடுத்து ராகவேந்திர ராவ் வீட்டுக்கு வந்து, நீங்கள் படம் முழுவதும் நன்றாக எடுத்தீர்கள்.. ஆனால் கிளைமாக்ஸை மாற்றுவதால் அந்த படத்தின் உணர்வு போய்விடும்.. படம் தோல்வியடையும் என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக ரஜினி தான் இதை சொன்னார் என்று தெலுங்கு இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.