கொரோனா ஊரடங்கல் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் |உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூடப் பட்டிருக்கின்றது.உயர் நீதிமன்றகளில் ஜூன் மாதம் தொடக்கத்தில் நேரடி விசாரணை தொடங்கப் பட்டது.அப்பொழுது நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததால் நேரடி விசாரணை ரத்து செய்தது.பின்பு உயர்நீதிமன்றக் கிளையில் வீடியோ கான்பிரன்ஸ் வசதிகள் கொண்ட விசாரணை நடத்த தொடங்கினார்.அதில் கடந்த ஜூலை மாதத்தில் 5520 மனு தாக்கல் செய்யப்பட்டன.
இதில் 1433 ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டதில் 1363 மனுக்களுக்கும்,குற்றவியல் மனுக்களாக 1389 மனுவில் 1333 மனுக்களுக்கு தீர்வு கண்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
மொத்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜூலை மாதத்தில் மட்டுமே வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையில் 5020 வழக்குகளில் 4832வழக்குக்கு தீர்வுகள் கண்டுள்ளதாக கூறியுள்ளனர்.
வீடியோ கான்பிரன்ஸ் விசாரணையின் மூலமாக கடந்த இரண்டு மாதமாக வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்தும், அன்றாட வாழ்க்கையில் இருந்தும், பயண நேரத்திலும் அவர்கள் வாதங்களை திறம்பட எடுத்து வைத்து சிறப்பாக வாதடுவதாக நீதிபதிகள் பாராட்டினர்.சில நேரங்களில் இணையதள இணைப்பு சரியாக இல்லாத நேரத்திலும் இணையம் கிடைக்கும் இடத்திற்கு சென்று தனது வாதங்களை தொடங்கி மிக சிறப்பாக வாதிட்டு முடித்தனர் என்று நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
கன்னியாகுமரியில் கிராமத்திலிருக்கும் வழக்கறிஞர்கள், தங்கள் கிராமத்தில் இருந்து கொண்டே உச்சநீதிமன்ற வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற வழக்குகள், மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்குகளில் சிறப்பாக வாதடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.