வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியான கிம் யோ ஜாங் பற்றிய பேச்சுகள் தான் அதிகம் வந்தன. ஏனெனில் கிம் ஜாங் உன்னிற்கு பிறகு இவர் தான், வடகொரியாவை வழி நடத்த தகுதியானவர், இவருக்கு தான் கிம் முன்னுரிமை கொடுப்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சில நாட்களுக்கு முன்பு, கிம் ஜாங் உன் மன அழுத்ததில் இருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் தன் சகோதரிக்கு தேவையான அதிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது கிம் யோ ஜாங் கடந்த ஜுலை 27-ஆம் தேதி முதல் பொது வெளியில் காணப்படவில்லை. வட கொரியாவின் சர்வாதிகார ஆட்சியைப் பெறுவதற்கு அவர் தயாராக இருப்பதாக கூறப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இவர் காணமல் போயுள்ளதால், இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
கொரிய தீபகற்பத்தில் இருந்து வரும் தகவல்களின்படி, கடந்த ஜூலை 27-ஆம் திக்தி முதல் கிம் யோ ஜாங் பொதுவில் காணப்படவில்லை. இந்த ஆண்டு முதல் அவர் அதிக முறை பொதுவெளியில் காணப்பட்ட நிலையில், ஆனால் சமீபத்தில் அவரை காணமுடியவில்லை அதிலும், கடந்த சில தினங்களாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயர் அதிகாரிகளுடன் பல முறை ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அதில் எங்கும் அவருடைய சகோதரி காணப்படவில்லை. கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான கடுமையான முயற்சியில் கிம் ஜாங்-உனின் சகோதரி பியோங்யாங்கில் இந்த பணியில் உள்ளார் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.