கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெண்களின் நலனை கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிமுகம் செய்தார். அந்த விதத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என்றும், அதோடு தாலிக்கு தங்கம் வழங்கும் விதத்தில் 8 கிராம் தங்கமும், 25,000 முதல் 50,000 வரையில் திருமண உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா.
ஆனால் இதில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்னவென்றால், தற்போதைய திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதிமுக அறிவித்த பல திட்டங்களை ஒவ்வொன்றாக தட்டிக்கழித்து வருகிறது. இதனை அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது.
இருந்தாலும் ஆட்சி, அதிகாரம், உள்ளிட்டவற்றை கையில் வைத்துக்கொண்டு தான் நினைத்ததை செய்துவிடமுடியும் என்று நினைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இந்த திருமண உதவித்தொகை காரணமாக, தமிழகத்தில் பல ஏழை எளிய பெண்கள் மற்றும் பெற்றோர்கள் பலனடைந்து வந்தார்கள். ஆனால் தற்போது இதற்கும் வேட்டு வைக்கும் விதமாக தற்போதைய அரசு செயல்பட்டு வருகிறது.
ஆனால் இந்தத் திட்டங்களில் திருமண உதவி தொகை எவ்வாறு பெற முடியும்? என்பது தொடர்பாக யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கிராமம் மற்றும் நகரத்தில் வாழ்கின்ற ஏழை பெண்களின் திருமணத்திற்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஏழை பெண்களுடைய பெற்றோருக்கு நிதியுதவி வழங்குவதும், பெண் கல்வி நிலையை உயர்த்துவதும் தான் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் நோக்கமென்று சொல்லப்படுகிறது.
விரிவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால் இந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தில் 10ம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு 25000 நிதியுதவியுடன் தாலிக்கு 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்காக 50000 ரூபாய் உதவித் தொகையும், 8 கிராம் தங்கம் இலவசமாக தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த விதத்தில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு 18 வயது நிறைவடைந்திருக்கவேண்டும் ஆண் மகனுக்கு 12 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டியது அவசியம் என்று சொல்லப்படுகிறது. குடும்ப வருமானம் 72000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். மணமகனின் தாய் அல்லது தந்தை பெயரில் உதவித்தொகை வழங்கப்படும். பெற்றோர் இல்லையென்றால் மணமகளின் பெயரில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பிப்பவர்களின் வீட்டில் யாரும் அரசு பணியில் இருக்கக் கூடாதாம்.
அதேநேரம் மணப்பெண் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்கலாம் தனியார் தொலைநிலைக் கல்வி மூலமாக படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பட்டதாரிகள் கல்லூரியிலோ. அல்லது தொலைநிலைக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பட்டயப் படிப்பென்றால், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே உதவித் தொகை கிடைக்குமென்று தெரிகிறது.
பள்ளியின் மாற்றுச் சான்றிதழ் நகல், திருமண அழைப்பிதழ், வருமானச்சான்று பத்தாம் வகுப்பு படித்தவர்களாக இருந்தால் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு உள்ளிட்டவைகளில் தேர்ச்சி சான்றிதழ் ரேஷன் அட்டையின் நகல் 1 பாஸ்போர்ட் சைஸ் அளவிலான புகைப்படம் 1 உள்ளிட்டவை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.