ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவு!! இன்றைய நிலவரம்!!

0
95
The price of jewelery gold is slightly lower!! Today's situation!!

Gold News: இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ஏற்றத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,275க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்தால் ஏழை மக்களுக்கு நன்மை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.59,000 த்தை கடந்து விற்பனை செய்தது. அதன் மூலம் தங்கம் வரலாறு காணாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது. பிறகு, விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்தது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு சுமார் ரூ.1,320 குறைந்து ரூ.57,600 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் இப்படியே தொடர்ந்து தங்கம் விலை குறையும் என எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.