பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய இந்த பாட்டி வைத்தியம் உதவும்!
விஷ ஜந்துக்களான பூரான், தேளை கண்டு பலரும் அஞ்சுவார்கள். இவை இரண்டும் ஈரப்பதம் மிக்க இடங்களில் அதிகம் காணப்படும். இந்த விஷ ஜந்துக்கள் தங்களை கடித்து விட்டால் பதட்டப்படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும்.
பூரான் கடி குணமாக வழி:
தும்பை இலை
இதை சிறிதளவு எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை பூரான் கடித்த இடத்தில் தடவினால் அவற்றின் விஷம் எளிதில் முறியும்.
மஞ்சள்
கல் உப்பு
சிறிது மஞ்சள் மற்றும் கல் உப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். அதன் பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ளவும்.
இதை பூரான் கடித்த இடத்தில் தடவினால் அவை எளிதில் குணமாகி விடும்.
வெற்றிலை
மிளகு
ஒரு வெற்றிலை மற்றும் 4 மிளகை உரலில் போட்டு இடித்து சாப்பிட்டால் பூரான் விஷம் முறியும்.
தேள் கடி குணமாக வழி:
தும்பை இலை
மஞ்சள்
சிறிது தும்பை இலையை அரைத்து மஞ்சள் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் முறியும்.
மோர்
கறிவேப்பிலை
அவுரி இலை
ஒரு ஸ்பூன் கறிவேப்பிலை மற்றும் ஒரு ஸ்பூன் அவுரி இலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.
இதை சிறிது மோரில் கலந்து பேஸ்டாக்கி தேள் கடித்த இடத்தில் பூசினால் அதன் விஷம் சில நிமிடங்களில் முறியும்.