அடடே அங்கேயா இவர் போட்டியிடப் போகிறார்! ஷாக் ஆன அதிமுக திமுக!

0
121

சென்ற வாரம் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய கட்சியின் பெயரை அறிவிக்கிறார் எனவும், ஜனவரி முதல் அவர் தன்னுடைய பணிகளை ஆரம்பிப்பார் எனவும், பல யூகங்கள் பரவி வருகின்றன. கட்சி தொடர்பாக ரஜினியின் அறிவிப்பிற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் அவருடைய மூத்த சகோதரர் சத்தியநாராயணராவ் நேற்றைய தினம் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று இருந்தார்.

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மற்றும் அருணகிரிநாதர் மீது ரஜினிகாந்த் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அவருடைய சகோதரர் சத்தியநாராயண ராவ் தன்னுடைய குடும்பத்தினருடன் அய்யங்குளத்தில் இருக்கின்ற அருணகிரிநாதர் கோவிலுக்கு பயணம் செய்திருந்தார். ரஜினிகாந்த் மற்றும் அவருடைய ரசிகர்களின் ஆரோக்கியம் மற்றும் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எஜமானி அந்த சமயம் யாகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்பு ஊடகங்களில் பேட்டி கொடுத்த சத்தியநாராயணன் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சியின் திட்டங்கள், மற்றும் அதனை நிர்வாகம் செய்யும் உறுப்பினர்கள் தொடர்பாக உறுதியாக இருக்கின்றார். இதுகுறித்து அவர் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி தன்னுடைய அறிவிப்பை வெளியிடுவார் அனைத்து முடிவுகளையும் அவர் எனக்கு தெரிவித்தாலும் நான் அவருடைய முடிவுகளில் தலையிடுவது இல்லை. அவருடைய வெற்றி மட்டுமல்ல வாழ்க்கைக்காக என்னுடைய அனைத்து விதமான ஆசீர்வாதங்களையும் அவருக்கு வழங்குகின்றேன் என்று தெரிவித்தார். திராவிட கட்சிகள் அரசியலில் இருந்து வேரோடு அழிக்கப்பட வேண்டும் அதற்கான நேரம் தான் இது என்று தெரிவித்தார்.

மக்கள் திராவிட கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். மக்களுடைய பல நம்பிக்கை போன்றவற்றை மதிக்காமல் நாத்திகத்தை வளர்க்கின்றனர் மனித நேயம் மட்டுமே கடவுள் அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எதிர் வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு கடவுள் விருப்பபட்டால் ரஜினி தன்னுடைய முதல் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அவர் தெரிவித்தார்.