கூகுளில் அதிகபடியாக தேடிய வார்த்தை இது தான! வசமாக சிக்கிய மத்திய அரசு!
உலகளவில் மக்கள் அனைவரும் செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது உள்ளங்கையிலேயே அனைத்து விஷயங்களையும் அடக்கி விடுகின்றனர்.அதே போல தேவையான பொருட்கள் அனைத்தையும் நேரில் சென்று வாங்குவதுடன் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர்.அதேபோல கூகுளில் அதிக படியான வார்த்தைகளை தேடுவோர் பட்டியலை கூகுள் ட்ரெண்ட்ஸ் மூலம் எடுப்பர்.அதை 0 விலிருந்து ஆரபித்து 100 வரை பட்டியலிடுவர்.அந்தவகையில் தற்போது அதிக அளவு தேடப்பட்ட பட்டியலில் ஆசிஜன் சிலிண்டர் என்ற வார்த்தையை தேடுவோரின் பட்டியலில் ஏப்ரல் 15-ம் தேதி அதன் எண்ணிக்கை 32 ஆக இருந்தது.
அதனையடுத்து ஏப்ரல் 19 –ம் தேதி அதன் எண்ணிக்கை 99 ஆக உள்ளது.அந்தவகையில் தற்போது அதிக அளவு ஆக்சிஜன் தேவை உள்ளது என்பது தெரிய வருகிறது.அரசாங்கம் ஆக்சிஜன் தேவைக்கேற்ப இருக்கிறது என்று கூறினாலும் 4 நாட்களிலேயே இந்த அளவிற்கு ஆக்சிஜன் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.குறிப்பாக டெல்லியை சேர்ந்தவர்களின் அதிகப்படியானோர் ஆக்சிஜன் என்ற வார்த்தையை தேடியுள்ளனர்.அதற்கடுத்து 3 வது இடத்தில் உத்தரபிரதேசம்,4 வது இடத்தில் குஜராத்தும், 8 வது இடத்தில் மராட்டியமும் உள்ளது.
குறைவாக ஆசிஜன் என்ற வார்த்தையை தேடியவர்களின் எண்ணிக்கை கேரளா,தமிழ்நாடு,வட கிழக்கு மாநிலங்கள் உள்ளன.அதுமட்டுமின்றி நாசிக் ஆக்சிஜன் விபத்து குறித்தும்,கேரளா ஆக்ஸிஜன் ஆலை குறித்தும் அதிகப்படியானோர் தேடியுள்ளனர்.அதனையடுத்து ரெம்டிசிவர் மருந்தை பற்றி அதிகப்படியானோர் தேடியுள்ளனர்.அந்த பட்டியலில் மகராஷ்டிரம் முதல் இடத்திலும்,டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது.குஜராத் 4-ம் இடத்திலும் தமிழகம் 15-ம் இடத்திலும் உள்ளது.
இதனையெல்லாம் அடுத்து near me என்ற வார்த்தையின் தேடலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.அந்தவகையில் இது 100 முதல் 600% வரை அதிகரித்துள்ளது.இதில் ஆக்சிஜன் நியர் மீ என்ற வார்த்தியை அதிகப்படியாக டெல்லி மக்களும்,வேக்சிநேஷன் நியர் மீ என்ற வார்த்தையை கேரளா மக்கள் அதிக அளவிலும் பயன்படுத்தியுள்ளனர்.ஆக்சிஜன் அதிக படியான தேவைகள் இருப்பதாக தெரிகிறது.