வெளுத்து வாங்கும் மழை:! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

0
244

வெளுத்து வாங்கும் மழை:! இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் பெய்து வரும் கனமழையால் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

இன்று தமிழகத்தில் சேலம்,நாமக்கல்,கரூர் கிருஷ்ணகிரி,தர்மபுரி,ஈரோடு,கோவை,
நீலகிரி,திருப்பூர்,திண்டுக்கல்,மதுரை,தேனி திருச்சி,மதுரை, அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை,தென்காசி,புதுக்கோட்டை,
கள்ளக்குறிச்சி, சிவகங்கை,விருதுநகர், திருவாரூர்,தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மீதமானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Previous articleஎப்பா அந்த செருப்பை எடுத்துட்டு வா! பொது மேடையில் திமுக பொருளாளரால் உண்டான சர்ச்சை!
Next articleபொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்தால் சன்மானம்:!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here