டோக்கியோ பாரா ஒலிம்பிக்! பங்கேற்ற முதல் போட்டியிலேயே பதக்கம் வென்ற இந்திய வீரர்!

0
198

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஓட்டு மொத்தமாக 7 பதக்கங்களை வென்றது .பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப்பதக்கம் வென்றார், அதேபோல ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது, இதில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் மீராஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக ஜப்பான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.

இந்தநிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்று இருக்கிறார்கள்.

இதில் இந்த போட்டியின் 6-வது நாளான இன்றைய தினம் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார். பங்கேற்ற முதல் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று அசத்தி இருக்கின்றார். யோகேஷ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா ஒரு தங்கம் 3 வெள்ளி ஒரு வெண்கலம் என்று 5 பதக்கங்களை கைப்பற்றியிருக்கிறது.

Previous articleவாகன ஓட்டிகள் மீது அதீத கருணை காட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
Next articleகோவை: 17 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த 19 வயது பெண் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here