பெண்ணை தொட்டாலே இனி இதுதான்! நீதிபதி சொன்ன அதிரடி!
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகே மூவாற்றுப்புழா என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் வசித்து வந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சந்தோஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மூவாற்றுப்புழா நீதிமன்றம் அவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சந்தோஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு ஒன்றை செய்தார். அதில் இந்திய தண்டனைச் சட்டமான375 ஐ குறிப்பிட்ட அவர் சிறுமியை நான் பலாத்காரம் செய்யவில்லை. எனவே தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நீதிபதிகள் வினோத் சந்திரன், சியாத் ரகுமான் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பெண்ணின் அனுமதியில்லாமல் பாலியல் ரீதியான எண்ணத்துடன் உடலில் எந்த இடத்தில் தொட்டாலும் அது பலாத்கார குற்றவாளி வகையிலேயே வரும். எனவே தண்டனையை குறைக்க முடியாது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் சிறுமி என்று நிரூபிக்க போலீஸ் தரப்பு தவறியதால், சந்தோஷ் மீது பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கு ரத்து செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.