பணி செய்யும் மக்களின் வருங்கால வைப்பு நிதி ஆனது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம் என்றே கூறலாம். இதை பணிசெய்யும் பணியாளர்களும் முதலாளியும் சமமாக சேமிப்பு தொகை ஒன்றை சேர்க்கின்றனர். இந்த தொகையை நீங்கள் ஓய்வு பெற்றபின் எடுத்துக் கொள்ளலாம், அல்லது ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போதும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு இடத்தில் பணி செய்து கொண்டிருக்கும்பொழுது அவசர உதவிக்காக முன்கூட்டியே பணம் வேண்டும் என்றாலும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதை அனுமதிக்கிறது. உங்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை உங்களால் எடுக்க முடியும்.
குழந்தைகளின் திருமணம், குழந்தைகளின் உயர் கல்வி, வீட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துதல், அவசரகால மருத்துவ நிலைமைகள், வீட்டைப் புதுப்பித்தல், வீடு வாங்குவது அல்லது நிர்மாணித்தல், நிலம் வாங்குதல் போன்றவற்றில் உங்கள் பிஎஃப் அக்கவுன்டில் இருக்கும் பணத்தை சரிபார்க்க விரும்பினால், எஸ்எம்எஸ், Missed Call, ஈபிஎஃப்ஒ App, UMANG பயன்பாடு அல்லது ஈபிஎஃப்ஒ போர்ட்டல் வழியாக சில நொடிகளில் செய்யலாம்.
உங்கள் UAN உங்கள் KYC விவரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு விவரங்களைப் பெற பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடு க்கலாம். 011-22901406 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு மிஸ்டு கால் மூலம் உங்களது பிஎஃப் அக்கவுன்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மிஸ்டுகால் கொடுத்த சில நிமிடங்களில் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி வரும்.
உங்கள் UAN உங்கள் KYC விவரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு விவரங்களைப் பெற குறுஞ்செய்தி அனுப்பலாம். சரியாக டைப் செய்ய வேண்டும். “EPFOHO UAN ENG” , இங்கே கடைசி மூன்று எழுத்துக்கள் எந்த மொழி வேண்டுமோ அதை குறிக்கிறது, அவை தேவைக்கேற்ப மாற்றலாம். உதாரணமாக, தமிழுக்கு TAM, மராத்தியுக்கு MAR மற்றும் 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும். அதன் பின் பிஎஃப் விபரங்களை குறித்த குறுஞ்செய்தி வரும்.
UMANG என்றும் மத்திய அரசின் செயலி மூலம் உங்கள் பிஎஃப் அக்கவுன்டில் எவ்வளவு பணம் உள்ளதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இணையதளத்திற்கு epfindia.gov.in சென்று தெரிந்துகொள்ளலாம்.