தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய இருக்கும் முக்கிய மாவட்டங்கள்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
217

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு, மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நாளைய தினம் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Previous articleதடுப்பூசி செலுத்துவதில் சாதனை படைத்த தமிழகம்!
Next articleஇந்தியாவில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை கடந்த நோய் தொற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here