வைரலாகும் ஆனந்த கண்ணனின் திருமண புகைப்படம்

90 காலகட்டங்களில் சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் ஆனந்த் கண்ணன். நகைச்சுவையான பேச்சு,நடிப்பு எராளமான ரசிகர்களை கவர்ந்தது.

அப்போது ஒளிப்பரப்பான சிந்துபாத் என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் சில ஆண்டுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் அவருடைய சொந்த ஊரான சிங்கப்பூரில் வசித்து வந்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் போது தமிழ் கலைகளை வளர்க்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இடையில் ஒரு தொலைக்காட்சியில் விஜேவாக வாய்ப்பு கிடைத்து பணியாற்ற ஆரம்பித்தார்.

அதே போல வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் தமிழ் ஆர்வலர் என வலம் வந்த இவர் சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆனந்த கண்ணனின் நினைவாக பலரும் சமூக வலைத்தளங்களில் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அவருடைய திருமண புகைப்படம் வைரலாகி வருகிறது.