தமிழகத்தின் முன்னாள் முதல்வரான,திமுக தலைவர்
மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.இவரை நினைவு கூறும் வகையில் கருணாநிதியின் மகனும் திமுகவின் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று மக்களுக்கு உருக்கமான கடிதத்தை ஒன்று எழுதி வெளியிட்டார்.அதில் அவர் மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தைச் சிதைக்கும் மத்திய அரசு,மத்திய அரசிற்கு, சரணாகதியாகி நிற்கும் மாநில அரசு என உரிமைகள் அனைத்தும் பறிபோகின்ற இந்தக் கடுமையான காலத்தில் நாம் இருக்கின்றோம். இந்திய ஜனநாயகத்தைச் சிதைக்கும் நோய்த் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் எதிர்ப்பாற்றல் தான் கருணாநிதி எனும் மகத்தான ஆற்றல்.இந்த ஆற்றலை நாம் ஒன்று சேர்த்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்து திமுகவின் கொடியை ஏற்றுவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து தற்போதைய முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், தமிழகத்தில் 2021- ஆம் ஆண்டு எந்த கட்சியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.ஸ்டாலின் அல்ல என்று தெரிவித்துள்ளார்.