உலகத்தில் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு ஆயுதத்துடன் பரிசுக்கான தொகையை அறிவித்திருக்கின்றது ஐசிசி.
9 அணிகள் பங்கு பெற்ற முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தனர். இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப் போட்டி இங்கிலாந்து இருக்கின்ற கௌதம் சவுத்தாம்டன் நகரில் வருகிற 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கான இந்தியா நியூசிலாந்து அணிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத் தொகை எவ்வளவு என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்து இருக்கின்றது.
அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தும் அணிக்கு கதாயுதத்துடன் 11 3/4 கோடி பரிசாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த கதாயுதம் இதற்கு முன்னால் உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் அணிக்கு வழங்கப்பட்டு வந்தது. கடைசி போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 5 3/4 கோடியும், மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 3 1/4 கோடியும், நான்காவது இடத்தை பிடிக்கும் அணிக்கு இரண்டரை கொடியும் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ஒன்றரைக் கொடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் மற்ற நான்கு அணிகள் தலா 73 லட்சத்தை பரிசாக பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கடைசி போட்டி சமனில் முடிந்தால் சாம்பியன் மற்றும் இரண்டாவது இடம் பெறும் அணிக்கு வழங்கப்படும் கூடிய பரிசு தொகையை மொத்தமாக சேர்த்து இரு அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்கப்படும். அதோடு கதாயுதம் இரு அணிகளும் சமமான காலம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
போட்டி ஆரம்பிப்பதற்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில், 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆறு மட்டை வீச்சாளர்கள் 2 விக்கெட் கீப்பர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த அணிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
15 பேர் கொண்ட இந்திய அணியில் விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, சுப்மன்கில், புஜரா, ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், உள்ளிட்டோர் இடம் பிடித்திருக்கிறார்கள்