Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

0
281

Wow..எந்தெந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்!

ஒவ்வொருவரும் தாங்கள் கட்டும் வீடானது மகிழ்ச்சி , செழிப்பு மற்றும் வளம் நிரம்பிய இடமாக இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். வாஸ்து சாஸ்திர விதிமுறைகளின்படி, வீட்டைக் கட்டினால் வீடு முழுவதும் நேர்மறையான ஆற்றல்களும் தெய்வீகத் தன்மையும், புனிதத் தன்மையும் நிறைந்து இருக்கும்.

பொதுவான வீட்டு வாஸ்து சாஸ்திர குறிப்புகளில் வரவேற்பு அறையில் உள்ள மரச் சாமான்கள் பொதுவாக, சதுர அல்லது செவ்வக வடிவத்தில் இருப்பதால் வீட்டிற்கு நன்மையை ஏற்படுத்தும். கனமான அதிக எடை கொண்ட மரச்சாமான்கள் தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி வைக்கப்பட வேண்டும்.அதே நேரத்தில், எடை குறைவான இலகுவான மரச்சாமான்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் முன் கதவு சூரியன் உதிக்கும் திசையான, வடகிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். வீட்டின் நுழைவாயில் என்பது எப்போதுமே எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல் இரண்டும் கடந்து செல்லும் மையப் புள்ளியாக கருதப்படுகிறது. வீட்டில் எப்பொழுதுமே பிரகாசமான மின் விளக்குகள் மட்டுமே வீட்டில் பொருத்த வேண்டும்.

வெளிச்சம் குறைவான, மங்கலான ஒளி தரக்கூடிய, உடைந்த, சேதமடைந்த மின் விளக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.அத்தகைய ஒளியானது எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்தும்.

சில வீடுகளில் இருண்ட மற்றும் கனமான திரைச்சீலைகள் பயன்படுத்துகிறார்கள். இது போன்று பயன்படுத்தப்படும் திரைச்சீலைகள் எதிர்மறை ஆற்றலை அதிகம் வெளிப்படுத்துகின்றன.

வீட்டில் ஏற்படும் எதிர்மறையான ஆற்றல்கள் துரதிஷ்டங்களை வெளிப்படுத்தும்.எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் நோய்கள் உண்டாகும்.

Previous articleஉஷார்! எந்தெந்த காய்கறிகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்?
Next articleசெம இதை வைத்து வேண்டினால் உடனே நடக்குமா? உடனே பாருங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here