கடனை திருப்பி செலுத்தக் கோரி துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

0
102

வங்கி கடன் பெற்றவர்களிடம் கடனை திருப்பி தரச்சொல்லி,அவர்களை துன்புறுத்தும் வங்கிகள் மீது புகார் அளிக்கலாம்:! காவல்துறையின் அதிரடி அறிவிப்பு!

வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிக்க கடன் பெற்றவர் வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டினாலோ அல்லது அவர்களை அவமானப் படுத்தினாலோ வங்கிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பொது முடக்கத்தால் நடுத்தர ஏழை மக்கள் பொருளாதார ரீதியாக,கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வங்கிகள் மற்றும் சில நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களை,கடனை திருப்பி செலுத்துமாறு துன்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது.

கடன் பெற்றவர்களிடம் தவணையை வசூலிக்க அவர்களுக்கு செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும், வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்களை அவமானப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் கட்டப்பட்டத மாத தவணைக்கு,அபராதம் விதித்து கூடுதல் பணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மீது அவர்கள் சரியாக கடனை திருப்பிக் கொடுக்காவிட்டால் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு அதிகாரம் உண்டே தவிர,நேரடியாக கடன் பெற்றவர்களின் வீட்டிற்கு ஆட்களை அனுப்பியோ,அல்லது மற்ற விதத்தில் துன்புறுத்துவதற்கோ,
மிரட்டுவதற்கோ,எந்த வங்கிகளுக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறிய காவல்துறை அதிகாரி,வங்கிகளில் வாங்கிய கடனுக்காக வீட்டிற்கு குண்டர்களை அனுப்பி மிரட்டி அவமானப்படுத்தினால் உடனே,காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் கொடுக்கலாம் என்றும்,அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.மேலும் வீட்டிற்கு வந்த நபர்கள் மீது அல்லது அவரை அனுப்பிய வங்கிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் காவல்துறைக்கு உள்ளது என்றும் காவல்துறை உயர் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.