அடிக்கடி நெஞ்சில் ஏற்படும் வலிகளுக்கு இதோ இந்த மருந்து போதும்!!
நம்மில் பலருக்கு அடிக்கடி சுள்சுள்ளு என்று நெஞ்சு வலி ஏற்படும். இந்த நெஞ்சு வலி வாயுக்கள் நெஞ்சில் தேங்கி நிற்பதால் இந்த வலி ஏற்படுகின்றது. அப்போது என்ன செய்வது ஏது செய்வது என்று நமக்கு தெரியாது. அவ்வாறு ஏற்படும் நெஞ்சு வலியை குணமாக்க இந்த பதிவில் ஒரு அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்…
* தேங்காய் பால்
* இஞ்சி
* கிஸ்மிஸ் பழம்
* முந்திரி
* ஏலக்காய்
* பூண்டு
* மஞ்சள்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
தோல் நீக்கி வைத்துள்ள இஞ்சித் துண்டை பொடியாக நறுக்கி ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தோல் நீக்கி வைத்துள்ள பூண்டு பற்களையும் சிறிது சிறிதா நறுக்கி அந்த பவுலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் எடுத்து வைத்துள்ள கிஸ்மிஸ் பழங்கள், முந்திரி பருப்புகள் அனைத்தையும் தேவையான அளவு எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயையும் இதில் நசுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
கடைசியாக இந்த பவுலில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும். தேவையான அளவு தேங்காய் பால் சேர்த்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு இதை அப்படியே எடுத்துக் கெள்ளலாம். இதில் சேர்த்திருக்கும் பொருள்களை மென்று தேங்காய் பாலையும் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமக்கு வாயுக்களின் தேக்கத்தால் அடிக்கடி ஏற்படுகின்ற சுள்சுள்ளென்றநெஞ்சு வலி குணமாகும்.