அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

0
328
#image_title

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த கே பி முனுசாமி .

அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். அதிமுகவை பொறுத்தவரை அரசியல் கட்சித் தலைவராக பாஜக கட்சியின் தலைவராக இருந்து இந்த ஊழல் பட்டியலை வெளியிட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை வெளியிட்டார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

பாஜக சார்பில் வெளியிட்டு இருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியில் இருந்த மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கின்ற ஆந்திரா ஒரிசா மேற்கு வங்கம் அந்த மாநிலங்களில் உள்ள பாஜக தலைவர்கள் இது போன்ற அந்த மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீது ஊழல் பட்டியல்கள் வெளியிட இருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா என்பதை தெரிவித்தால் அதற்கு ஏற்றவாறு அதிமுகவின் பதில் இருக்கும்.