Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிகளவில் முடி உதிர்வதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா ?

இன்றைய தலைமுறை ஆண்களும், பெண்களும் அதிகம் சந்திக்கக்கூடிய பிரச்சனை முடி உதிர்தல் இந்த பிரச்சனையால் பலரும் தின்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்சூடு, இரும்புசத்து குறைவு போன்ற சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்றாலும், இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. சிலருக்கு மன அழுத்தத்தால் முடி கொட்டுகிறதா அல்லது முடி கொட்டுவதால் தான் மன அழுத்தம் ஏற்படுகிறதா என்றெல்லாம் கூட குழப்பம் இருக்கும். மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது நமக்கு தெரியும் அதில் முக்கியமான ஒன்று தான் அதிகப்படியான முடி உதிர்தலும். இன்றைய காலகட்டத்தில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருக்கக்கூடிய மன அழுத்தம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.Home remedy for hair fall: Try this DIY seed mix | HealthShots

மன அழுத்தம், ஹார்மோன்கள் மற்றும் முடி ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு இணைப்பு உள்ளது,
முடி உதிர்தலுக்கு மன அழுத்தம் தூண்டும் காரணியாக இருக்கும் என்பது பலருக்குத் தெரியாது. கூடுதலாக, மோசமான தூக்கம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை மாற்றுவதன் மூலம் முடியை பாதிக்கலாம். அதிகரித்த ஹார்மோன் அளவுகள் ஹைலூரோனிக் அமிலம் மற்றும் புரோட்டியோகிளைகான்கள் போன்றவை முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம். மன அழுத்தம் காரணமாக சிலருக்கு இளம் வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. அதாவது மன அழுத்தம் நோராட்ரீனலின் அளவை அதிகரிக்கிறது, இது மெலனோசைட் ஸ்டெம் செல்களின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் முடிக்கு கருமையான நிறத்தை வழங்குவதற்கு காரணமான செல்கள் முடி நரைக்க காரணமாகிறது.How hair loss can impact your mental health | Health - Hindustan Times

ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறுவதற்கு நல்ல மன நலனை பராமரிப்பது அவசியம், உங்களுக்கு பாசிட்டிவ் வைபை தரக்கூடியவர்களையே உங்களை சுற்றி வைத்துக்கொள்ளுங்கள். சுவாசப் பயிற்சிகள், தியானம் மற்றும் இசை கேட்பது போன்றவற்றை செய்து மன அழுத்தத்தை போக்க முயற்சி செய்யுங்கள். தலைக்கு மசாஜ் செய்வது உங்களது முடி வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கிறது.

Exit mobile version