Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அனைத்து சிறுநீரக பிரச்சினைக்கு மிளகுடன் இதை சாப்பிட எரிச்சல், நமைச்சல், அடைப்பு என நீங்கும்!

#image_title

இந்த பிரச்சனையை பொதுவாகவே அனைத்து மக்களுக்கும் வருகின்றது. சிறு வயது முதல் பெரிய வயது வரை இந்த பிரச்சனை அனைவருக்கும் வருகின்றது. அந்த இடத்தில் மிகவும் எரிச்சலாக இருக்கின்றதா? சிறுநீர் கழிக்கும் பொழுது மிகவும் எரிகின்றதா? இதோ அதற்கான நாட்டு மருத்துவம்.

பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை அனைத்து மக்களுக்கும் உள்ளது. டாக்டரிடம் சொல்ல மிகவும் கூச்சப்பட்டு இருப்பார்கள். இதனால் வலி தான் அதிகரிக்குமே தவிர வலிக்கு ஒரு தீர்வு இருக்காது. பொதுவாக பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் பொழுது ஆண்கள் ஆகட்டும் பெண்களாகட்டும் தங்களது அந்தரங்க பகுதியில் தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும். அப்படி கழுவாவிடில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. சிறுநீர் கழித்த உடனேயே அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். இப்பொழுது இந்த பிரச்சனையை தீர்க்க எளிமையான மருத்துவத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. சிறுகண்பீளை
2. கருப்பு திராட்சை பழம்
3. மிளகு

செய்முறை:

1. சிறுகண்பீளை என்னும் செடி கிராமப்புற பகுதிகளில் கிடைக்கும். ஆனால் நகர்புறங்களில் கிடைக்காது. நீங்கள் அதற்கேற்றவாறு நாட்டு மருந்து கடைகளில் சிறுகண்பீளை என்று வாங்கிக் கொள்ளுங்கள்.
2. ஒரு கைப்பிடி சிறுகண்பீளை இலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
3. அதை மிக்ஸியில் போட்டுக் கொள்ளுங்கள்.
4. 100 கிராம் அளவிற்கு கருப்பு திராட்சை பழத்தை அதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
5. பத்து மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள்.
6. இப்பொழுது இதனை அனைத்தையும் ஒன்றாக மைய அரைத்து வடிகட்டி கால் டம்ளர் அளவிற்கு வருமாறு எடுத்து கொள்ளுங்கள்.
7. இதனை வாரம் மூன்று முறை குடித்தால் போதும் உங்களுக்கு அந்தரங்க பகுதியில் ஏற்படும் எரிச்சல், அமைச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலுடன் வெளி வருவது என அனைத்தும் நீங்கும்.

Exit mobile version