அரசுக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்! போலீசாரால் விரட்டியடிப்பு!
டெல்லியில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் டெல்லியில் தற்போது கோடை காலம் என்பதால், கோடையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வறட்சி நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது.
வட இந்தியாவில் ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. எனினும் டெல்லியில் இன்னும் மழைப்பொழிவு ஏற்படவில்லை. என்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் காரணமாக பாஜக தொண்டர்கள் சிலர் அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்தனர்.
அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் பல முறை எச்சரித்தும், பாஜகவினர் அதனை ஏற்கவில்லை. போலீசாரின் எச்சரிக்கையை மீறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக வேறு வழி இல்லாததன் காரணமாக போலீசார் அவர்கள் மீது தண்ணீர் அடித்து அவர்களை அந்த பகுதியில் இருந்து விரட்டி அடித்தனர்.
தற்போது போராட்டத்தில் ஈடுபடும் பாஜக ஆட்சிக்கு வந்தால் யார் சொல்வதையும் கேட்காமல் மௌனம் சாதிக்கும். எடுத்துக்காட்டாக தமிழகத்தையே எடுத்து கொள்ளலாம். கேஸ் சிலிண்டரின் விலை தமிழகத்தில் 300 ருபாய் மதிப்பில் இருந்த காலம் தொட்டே பா.ஜ.க அமைச்சர்கள் பலர் வீதியில் இறங்கி போராட்டம் செய்தனர். அதே போல் பெட்ரோலின் விலை கூட ருபாய் 58 சொஜ்ஜம் இருக்கும் போதே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தற்போது ஆட்சி அமைத்துக்கொண்டு இருக்கும் போது தற்போதைய சிலிண்டரின் விலை ரூ.920 ஆகவும், பெட்ரோலின் விலை ரூ.100 ஐ தாண்டியும் கூட மக்களுக்கு ஏதும் செய்த பாடில்லை.
பலர் அதன் காரணமாக கஷ்டப்படுகின்றனர். பல பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் என்னதான் விமர்சனங்கள் எழுந்தாலும் மத்திய அரசோ, பா.ஜ.க அரசோ அதை கேள்வி கேட்ட பாடில்லை. அதற்கு பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறது.