அரை மூடி தேங்காய் போதும் சாகும் வரை மூட்டு வலி முழங்கால் வலி ஏற்படாது!! 100% அனுபவ உண்மை!!
நம்மில் பலருக்கும் 30 வயசை கடந்து விட்டாலே மூட்டு வலி முழங்கால் வலி ஏற்பட்டு விடுகிறது. இவ்வாறு இருப்பதால் காலையில் எழுந்து சிறு சிறு வேலைகளை கூட நம்மால் செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகிறது.
இதில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்கள் இல்லாததே இதன் முக்கிய காரணமாகும். ஆரம்ப கட்டத்தில் இருந்தே இதற்கென்று உணவுப் பழக்கவழக்கத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வந்தால் இந்த மூட்டு முழங்கால் வலியில் இருந்து விடுபடலாம்.
ஆனால் மக்களுக்கு இது குறித்து போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் 30 வயசு கடக்கும் வரை உணவு பழக்க வழக்கத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதில்லை.
சிறிதளவு கால்சியம் நிறைந்த பாலை கூட எடுத்துக் கொள்வதில்லை. இந்த மூட்டு முழங்கால் வலி வந்த பிறகுதான் இவர்கள் அதற்கு உண்டான உணவை தேடியே செல்கின்றனர். ஆனால் நாம் ஆரம்ப கட்டத்தில் இருந்து உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வரும் பட்சத்தில் இதனை முற்றிலும் தவிர்க்க முடியும்.
அந்த வகையில் தற்போது இந்த பதிவில் வருவதை ஒரு வாரத்தில் இரண்டு அழகும் மூன்று நாட்கள் செய்தால் போதும். கட்டாயம் மூட்டு வலி என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
தேவையான பொருட்கள்:
தேங்காய் அரை மூடி
பேரிச்சம்பழம் நான்கு முதல் ஐந்து வரை
செய்முறை:
தேங்காயை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் பேரிச்சம் பழத்தையும் சிறிதாக வெட்டி கலந்து கொள்ள வேண்டும். மற்ற காலை உணவுகளை தவிர்த்து விட்டு இதனை ஒரு வேளை உண்டு வரவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர நல்ல மாற்றத்தை காண முடியும்.