இதிலிருந்து தான் தொற்று பரவுகிறது! அச்சத்தில் ஊர் பொதுமக்கள்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
ஒரு பகுதியில் குளம் இருக்கிறது என்றால் அதில் தேவையற்ற கழிவுகள் கலந்து சுகாதாரமற்றவையாக மாறிவிடுகிறது. இதனால் அந்த குளத்தில் இருக்கும் நீரை உபயோகிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இவ்வாறு திண்டுக்கல்லில் அமர்ந்த நகரில் ஒரு குளம் உள்ளது. இதுக்குள்ள போனது வெகு நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. அதுமட்டுமின்றி குளத்தை சுற்றியுள்ள வீடுகள் அவர்களின் கழிவு நீரை அந்த குளத்தில் கலக்கும் படி விடுகின்றனர். இதனால் குளம் முழுவதும் பாசனம் ஏற்பட்ட மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
அதுமட்டுமின்றி குளம் முழுவதும் தேவையற்ற கழிவுகள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை மிதந்தபடியே தான் இருக்கிறது. அரசாங்கம் ஆங்காங்கே நீரை தேங்காமல் வைத்துக் கொள்ளுங்கள்.அப்பொழுதுதான் கொசு மூலம் பரவும் மலேரியா போன்ற நோய்கள் குறையும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய குளம் பெருமளவு பாதிப்படைந்து நோய் தொற்று பரவும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் இதனை அரசு சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
அந்த நீரில் தேவையற்ற கழிவுகள் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தி இடத்தில் அதிகமாக உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. அதனால் குளத்தை சுற்றியுள்ள அப்பகுதி மக்களுக்கு தேவையற்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இந்த குளத்தை தூர்வாரி தேவையற்ற பராமரிப்பு பணிகள் செய்து தருமாறு அவ்வூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விரைவில் குளத்தை சுத்திகரித்து மக்கள் பயன்படுத்தும் வகையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.