இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பெண்! தேசிய அகாடமியில் தலைவர் பொறுப்பு!

0
179

டெக்சாஸ் பல்கலைக்கழக எம்.டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் மரபியல் துறையின் பேராசிரியரும் துணைத் தலைவருமான ஸ்வாதி அரூர் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர்,  தேசிய மருத்துவ அகாடமியால் (NAM) 2022 ஆம் ஆண்டுக்கான உடல்நலம் மற்றும் மருத்துவ பிரிவில்  வளர்ந்து வரும் தலைவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2016 இல் உருவாக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் MD ஆண்டர்சன் ஆசிரிய உறுப்பினர் ஸ்வாதி அரூர்.

1991-1994 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்ததில் இருந்தே, ஹெச்ஐவி உள்ள குழந்தைகளுக்கு சிறந்த சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்தும் ஒரு அரசு சாரா நிறுவனத்தை ஸ்வாதி அரூர் நடத்தி வருகிறார்.

2001 ஆம் ஆண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்று மற்றும் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பணியை செய்தார்.

டாக்டர் ஆரூரின் பங்களிப்புகள் மற்றும் வாழ்க்கை அறிவியலில் இவரது தலைமைத்துவம் ஆகிய இரண்டிற்கும் தேசிய மருத்துவ அகாடமியால் இவரை  அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று எம்.டி ஆண்டர்சனின் தலைவர் பீட்டர் பிஸ்டர்ஸ் கூறினார்.

‘புற்றுநோய் பரவலின் ஆராய்ச்சயில் அவரது ஆர்வம், நிபுணத்துவம் மற்றும் அடிப்படைப் பணி ஆகியவை எங்கள் நிறுவனத்திற்கு விலைமதிப்பற்றவை என்றும் அவர் கூறினார்.

உலகம் பெரும்பாலும் நம் என செய்கிறோமோ அந்த செயல்களின் விளைவாகவும், நாம் முன்னோக்கி  செல்வதாலும் உருவாகிறது,’ என்று ஆரூர் கூறினார். ‘வளர்ந்து வரும் தலைவராகப் பெயரிடப்படுவது ஒரு கெளரவம் மட்டுமல்ல, உலகத்தை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடும் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கொள்கையில் உலகளாவிய தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இது எனக்கு வாய்ப்பளிக்கிறது.’ என்று அரூர் கூறினார்.

2016ல் எம்.டி.ஆன்டர்சன் பிரசிடென்ஷியல் ஸ்காலர்,  மற்றும் 2017ல் ஆண்ட்ரூ சபின் ஃபேமிலி ஃபெலோ,மற்றும்  2018ல் புகழ்பெற்ற ஆசிரிய வழிகாட்டி, மற்றும் 2022 கல்வி மற்றும் வழிகாட்டி முன்னேற்றத்திற்கான ஜனாதிபதி கௌரவர் உட்பட பல சிறப்புகளை அரூர் இதுவரை பெற்றுள்ளார்.

அவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) செல்லுலார், மூலக்கூறு மற்றும் ஒருங்கிணைந்த இனப்பெருக்கம் பற்றிய ஆய்வுப் பிரிவின் ஆய்வு உறுப்பினராகவும், டெவலப்மென்ட்டில் ஆசிரியராகவும் உள்ளார். 2023 மற்றும் 2025 இல் வளர்ச்சி உயிரியலில் கோர்டன் ஆராய்ச்சி மாநாட்டின் இணைத் தலைவர் மற்றும் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.