ஸ்மார்ட்போன்களில் தற்போது ஐபோன் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருப்பது குறித்த அறிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டன.
இது business-standard இன் அறிக்கையின் படி இந்தியாவில் ஐபோன் 12 இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட் போன்கள் தயாரிக்க, தைவானின் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் தயாரிப்புக்கான முதலீடு சுமார் 2,900 கோடிகளுக்கு மேல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் ஐபோனின் தயாரிப்புகள் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நரசபுரா தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்திலேயே ஏற்கனவே ஆயிரம் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது இந்தியாவின் ஆப்பிள் நிறுவனத்தின் முதலாவது தொழிற்சாலை இல்லை. ஏற்கனவே ஐபோனின் 11, ஐபோன் எக்ஸ் ஆர் ஆகிய மாடல்களின் அசம்பல் மாடல்களை ஐபோன் நிறுவனம் உருவாக்கியது.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஐபோன் எஸ்இ இன் அசம்பிளிங்கை தயாரிக்கும் வேலையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் மாடல்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இதன் விலைகள் குறைக்கப்படும் என வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோனின் விலையை குறைப்பதற்கான எந்த ஒரு சாத்தியக்கூறும் இல்லை.
மேலும் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்கப்பட்டு வருவதால் ஐ போனின் விலை கூடுதலாகவும் விற்பனைக்கு வழங்கப்படலாம் இன்று ஸ்மார்ட்போன் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.