முகத்தில் காணப்படும் சுருக்கங்கள் நீங்க கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை ட்ரை பண்ணவும்.
தேவையான பொருட்கள்:
1)தயிர் – ஒரு தேக்கரண்டி
2)ட்ராகன் ப்ரூட் – 1/4 கப்
பயன்படுத்தும் முறை:
ட்ராகன் ப்ரூட் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தயிர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைக்கவும்.இந்த பேஸ் பேக்கை முகத்திற்கு அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் பண்ணவும்.
இப்படி தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முக வறட்சி நீங்கி சருமம் பொலிவாகவும் மிருதுவாகவும் காணப்படும்.
தேவையான பொருட்கள்:
1)தேங்காய் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)கற்றாழை ஜெல் – இரண்டு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு மூன்று முதல் நான்கு முறை அலசி சுத்தப்படுத்தவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.இந்த பேஸ்டை தேங்காய் எண்ணெயில் கலந்து இரவு முகத்திற்கு அப்ளை செய்து மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவவும்.இப்படி செய்வதால் சரும வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)பாலாடை – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
இரண்டு தேக்கரண்டி பாலாடையை க்ரீம் பதத்திற்கு அரைத்து மஞ்சள் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.
தேவையான பொருட்கள்:
1)பன்னீர் – ஒரு தேக்கரண்டி
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)வைட்டமின் E மாத்திரை – ஒன்று
பயன்படுத்தும் முறை:
ஒரு கிண்ணத்தில் தேன் ஒரு தேக்கரண்டி,பன்னீர் ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும்.பிறகு அதில் ஒரு வைட்டமின் E மாத்திரையை மிக்ஸ் செய்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.