Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சம்பள பாக்கிகள் வசூலாகும்!

மேஷம்

இன்று தாங்கள் உயர்ந்த மனிதர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடையும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவி கேட்க வருகை தருவார்கள். பழைய பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு லாபகரமான நாள். நல்லவர்களின் தொடர்பு காரணமாக, நலம் பெறுவீர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆதாயம் தரும் காரியமொன்றில் அதிக ஈடுபாடு செலுத்துவீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுடைய மனக்கசப்புகள் மாறும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உண்டாகலாம். வாகன வழியில் திடீர் செலவுகள் ஏற்படும் மன அமைதி குறையும் உத்தியோகத்தில் பிரச்சனை ஏற்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு வாரிசுகள் மூலமாக பெருமை சேரும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் பணப் பரிமாற்றத்தில் ஆதாயம் ஏற்படும் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, உள்ளிட்டவை உயரும் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை தோன்றும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் முடிவுக்கு வரும் திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். தொழில் தொடர்பான முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி

இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தகுதியான நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதில் தவறில்லை என நினைப்பீர்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு நல்ல விதமாக முடிவடையும்.

துலாம்

இன்று தங்கள் நன்றாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை பயணத்தை தள்ளி வைக்க நேரலாம் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

விருச்சிகம்

இன்று பெண்களுக்கு யோகமான நாள். நாட்டை ஆளும் நபர்களின் நட்பு கிடைக்கும் நாள். வாரிசுகளின் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம் வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு

இன்றைய தங்களுடைய அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் நாள். பழைய வாகனத்தை மாற்றவேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம் மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

மகரம்

இன்று தங்களுக்கு மறக்க முடியாத சில சம்பவங்கள் நடைபெறும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். சொத்து வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும்.

கும்பம்

சண்டை காரர்கள் தானாக விலகி செல்லும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றியமகிழ்ச்சியடைவீர்கள் உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் வழங்குவார்கள் புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

இன்று பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் உத்தியோகத்தில் வரவேண்டிய சம்பள பாக்கிகள் வந்து சேரும்.

Exit mobile version