Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும்!

மேஷம்

இன்று தங்களுக்கு நேற்றைய சேமிப்பு இன்றைய செலவுக்கு கைகொடுக்கும் நாள், நிச்சயம் செய்யப்பட்டதில் மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வாங்க செலவுகள் உண்டாகலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்குள்ள தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிய வேண்டிய நாள், தன்னிச்சையாக செயல்பட்டால் நன்றாக இருக்கும் என விருப்பம் கொள்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

மிதுனம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை ஏற்படும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வார்கள்.

கடகம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணப்பரிமாற்றம் ஒழுங்காகும், வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களது புதிய பாதை புலப்படும் நாள், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள். தொழில்ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அஸ்திவாரத்தில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகும்.

கன்னி

எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள், நண்பர்கள் நல்ல தகவல்களை சொல்லுவார்கள். உத்தியோகத்தில் நிரந்தர பணிக்கான தகவல் வரலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு எதிர்ப்புகள் யாவும் விலகி செல்லும் நாள், கையில் எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும், நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் ஆலய வழிபாட்டினால் வளர்ச்சி காண வேண்டிய நாள், காலை சமயத்தில் மனக்குழப்பம் அதிகரிக்கும், தன்னம்பிக்கை குறையும், ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உடனே கிடைக்கும்.

தனுசு

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், பரிவர்த்தனைகளில் கவனம் தேவை, திடீர் செலவுகளை சமாளிக்க மற்றவர்களிடம் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

மகரம்

இன்று தங்களுக்கு நன்மைகள் யாவும் நடைபெறும் நாள், மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். தொலைபேசி வழித்தகவல் அனுகூலமாக இருக்கும், உத்தியோகத்தில் புதிய வேலைக்கு விண்ணப்பம் செய்யலாமா என சிந்தனை தோன்றும்.

கும்பம்

நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் உண்டாகும் நாள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசனை தோன்றும்.உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள், மங்கள செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும்.

மீனம்

இன்று சண்டை சச்சரவுகள் நீங்கும் நாள். சகோதர பாசம் அதிகரிக்கும், சான்றோர்களின் மதிப்பு கிடைக்கும். வெகு நாளைய பிரச்சினை ஒன்று நல்லதொரு முடிவுக்கு வரும் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

Exit mobile version