Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!! 

Warning to these zodiacs!! Today's Horoscope!!

Warning to these zodiacs!! Today's Horoscope!!

இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய ராசிபலன்!!

ஜோசியம், நேரம், காலம், உள்ளிட்டவற்றில் நம்பிக்கை இல்லாத பலரும் கூட ராசி பலன் படிப்பதில் ஆர்வம் காட்டுவர்.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ராசி பலன் படிப்பதை ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் காலையில் எழுந்ததும் ராசி பலன் படித்த பின்னரே தங்களது தினசரி வேலையினை செய்ய துவங்குவார்கள். இத்தகைய வழக்கம் உள்ள மக்களுக்கான பதிவு இது.

மார்ச்.,13க்கான ராசி பலன்கள்

மேஷம் : திருமணம் ஆகாதோர் அதற்கான நல்ல அறிகுறி காணக்கூடிய நாள்.வீடு மற்றும் உத்யோக மாற்றம் குறித்து ஆலோசிப்பீர்.நண்பர்களால் நன்மை கிட்டும். தொழில் ரீதியான பயணத்தில் பலன் கிடைக்கும்.

ரிஷபம் : எதிர்பார்த்த வரவுகள் வரக்கூடிய நாளாக அமையும். பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கு பதில் அழைப்பு வரக்கூடும்.பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.சந்தோஷ தருணங்கள் நிகழ கூடிய நாள்.

மிதுனம் : பலநாள் ஆசை நிறைவேறக்கூடிய நாள்.நிதி நிலை உயரும், அரசியவாதிகள் மூலம் அனுகூலம் கிட்டும். பணி உயர்வு குறித்த செய்திகள் வரலாம்.

கடகம் : கனிவாக பேசி காரியம் சாதித்து கொள்வீர்கள்.கடமைகள் செய்வதில் ஏற்பட்ட மெத்தனம் அகலக்கூடிய நாளாக அமைய வாய்ப்புள்ளது.சக பணியாளர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும்.வேலை சம்மந்தப்பட்ட அழைப்புகள் வர வாய்ப்புள்ளது.

சிம்மம் : போட்டிகளை சந்தித்து வெற்றி காண்பீர்.கடன்சுமை குறையும், பயணங்கள் பலனளிக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும், உடல் ஆரோக்கியம் சீர்படும்.

கன்னி : தொழில் கூட்டாளிகளிடம் உஷாராக இருப்பது நன்று. விரையம் அதிகமாகும், நம்பிக்கையானவர்களிடம் இருந்து நல்ல செய்தி வரலாம்.வெளிநாடு செல்வது குறித்த எண்ணம் மேலோங்கும்.

துலாம் : வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகமிருக்கும்.நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று எண்ணும் வகையான நாளாக அமையும்.

விருச்சிகம் : வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்.புதிய பொறுப்புகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும், முன்னேற்றம் கூடும்.

தனுசு : வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர், வரவு வரக்கூடும். பணி மாற்றம் உறுதியாகலாம், குடும்ப பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய நபர்களை சந்திப்பீர்.

மகரம் : இழுபறியாக இருந்த விஷயங்கள் நிறைவேறும், மனக்குழப்பம் நீங்கும். வியாபாரம் குறித்து எடுத்த முடிவுகள் வெற்றியளிக்கும்.நேற்று நடந்த பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும்.

கும்பம் : சுபகாரியம் குறித்த பேச்சுக்கள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படும். மதிப்பும், மரியாதையும் கூடும், தேவைகள் பூர்த்தியாகும், சேமிப்பு வேண்டும் என்னும் எண்ணம் தோன்றும்.

மீனம் : நண்பர்கள் பகையாகலாம், எதிர்பார்த்த விஷயங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படலாம். வரவு இருந்தாலும் செலவுகள் அதிகமாகும், நிதானமாக இருக்க வேண்டிய நாள் இது.

Exit mobile version