இந்த 1 டீ போதும் 7 நாளில் உங்கள் தொப்பையை குறைக்க!!

0
283
#image_title

இந்த 1 டீ போதும் 7 நாளில் உங்கள் தொப்பையை குறைக்க!!

கோடை காலத்தில் கிடைக்கும் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் பயக்கும். அந்த வகையில் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் முருங்கை மற்றும் அதன் டீயை பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

தென்னிந்திய மாநிலங்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் முருங்கை இலை, முருங்கைக்காய், முருங்கைப்பூ என அனைத்திலும் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக் கீரை பொரியல், முருங்கை சூப் ஆகியவை பிரபலமான உணவுகளாகும்.

தற்போது முருங்கை இலை தேநீரும் பிரபலமான பானமாக உள்ளது. இந்த தேநீரின் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

தொப்பையை குறைக்க

பல அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் இந்த தேநீரில் உள்ளது. இது உங்கள் உடலிலுள்ள உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க உதவுகிறது. இந்த தேநீர் உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, கொழுப்பு சேமிப்பிற்க்கு பதிலாக ஆற்றலை உடலில் சேமிக்கிறது.

முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து கொண்டவையாக உள்ளன. அதிக கலோரி உணவுகளுக்கு மாற்றாக முருங்கை தேநீரை எடுத்துக் கொள்ளலாம். முருங்கை இலை தேநீர் கொலஸ்டிரால் அளவை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

இரத்த அழுத்தம்

முருங்கை இலையில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரானது இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் என கூறப்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் க்வெர்செடின் என்ற பொருள் இதில் உள்ளது. இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதன் ஆக்சிஜனேற்ற திறன் காரணமாக, வீக்கத்தை எதிர்த்து போராடவும் முருங்கை தேநீர் உதவும்

நீரிழிவு நோயாளிகளுக்கும் முருங்கை இலை நல்ல உணவு. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட் குளோரோ ஜெனிக் அமிலமானது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி நிறைந்த முருங்கை இலை தேநீர் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

 

சருமத்தை பொலிவாக வைப்பதிலும் முருங்கை தேநீரின் பங்கு உள்ளது. உங்கள் முடி வளர்ச்சிக்கும் முருங்கை இலை பெரிதும் உதவுகிறது.

வீட்டிலேயே முருங்கை டீ தயாரிப்பு

ஒரு கப் முருங்கை இலையை எடுத்து அதன் நன்றாக காயவைத்து, பின்னர் அவற்றை நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து 2 ஸ்பூன் முருங்கை இலை பொடியை போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி இந்த தேநீரை குடிக்கலாம்.