Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இனிப்பு வாங்கித் தருவதாக இழுத்துச்சென்று 5 வயது சிறுமியை நாசம் செய்த காமுகன்.!! புதுச்சேரியில் பரபரப்பு.!!

புதுச்சேரியில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் கிருமாம்பாக்கம் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 55வயது முனியப்பன்.இவர் ஒரு மீனவர் ஆவார்.இவருக்கு திருமனமாகி 17ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரின் வீட்டிற்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்துள்ளார். அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாகக் கூறி தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுமியிடம் இதை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில், அந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு விசாரித்த பெற்றோர் தனக்கு நடந்ததை கூறி சிறுமி அழுதுள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் முனியப்பனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Exit mobile version