இன்றைய தளர்வு! அரசின் தவறான முடிவு! புலம்பும் மக்கள்!!!

0
125

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை உச்சகட்ட நிலையை எட்டி உள்ளதால் இன்று ஒரு சில தளர்வுகள் அளித்து நாளை முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு பின்பற்றப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது. ஏற்கனவே அளித்தது போல் பால் , குடிநீர், பத்திரிகை போன்ற விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

காய்கறிகள் மற்றும் பழங்கள் தோட்டக்கலை வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும், ஏடிஎம் செயல்படும். பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்கள் செயல்படும். மருந்தகம், நாட்டு மருந்தகம் கால்நடை மருந்தகம் போன்றவற்றுக்கு தளர்வு இல்லை என்று அறிவித்துள்ளது.

 

பொதுமக்களின் நலன் கருதி வெளியூர் செல்லவும் 4500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி மற்றும் மற்ற பொருட்கள் வாங்க அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்று அரசு அறிவித்திருந்தது.

 

இந்த தளர்வுகள் மக்கள் கூடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடும் பொழுது கொரோனா சற்று வேகமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கியமான சாலைகள் அனைத்திலும் வாகனங்கள் அலை மோதுகின்றன. இந்த தளர்வுகள் அவசியமா? என்று மக்கள் கேட்டு வருகின்றனர். கொரோனா ஒவ்வொரு நாளும் உச்சத்தை தொடும் நேரத்தில் இந்த தளர்வுகள் எதற்கு? என்று பலபேர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

இறைச்சி, மீன், மளிகை, காய்கறி எனகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் கொரோனாவின் விதிமுறைகள் யாவும் காற்றில் கைவிடப்பட்டுள்ளது.

 

சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை! முக கவசத்தையும் ஒழுங்காக அணியவில்லை! என்ற பட்சத்தில் கொரோனா மீண்டும் உச்சத்தை அடையாதா? உயிர்சேதம் ஏற்படாதா? எந்த ஒரு விழிப்புணர்வும் இன்றி மக்கள் நடமாடும் பொழுது கொரோனா கண்டிப்பாக பரவும். மக்களின் சுய கட்டுப்பாடுகளையும் மீறி இது நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த தளர்வுகள் அவசியம் அற்றது என்றே கூறலாம் என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.