Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்ஸ்டா ரீல்ஸ் மோகம், பலியான இளம்பெண்… இருவர் கைது..!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

Suddenly the magical girl!! Instagram that gave clues to the police!!

ரீல்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களில் பிரபலமடைய பொது இடங்களில் ரீல்ஸ் செய்து போடுவதை 2k கிட்ஸ் வழக்கமாக கொண்டுள்ளனர். பெரும்பாலும் சாலைகளில் அவர்கள் செய்யும் ரீல்ஸ்கள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதோடு அவர்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பல நேரங்களில் காவல்துறையினர் அவர்களை கண்டித்து தண்டனை வழங்கினாலும் அவர்களின் இந்த செயல் தொடர்ந்து கொண்டே வருகிறது. அப்படி ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மகாராஷ்டிரா மாநிலம், ஹதப்சார் என்ற பகுதியில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இரு இளைஞர்கள் ரீல்ஸ்க்கா பைக் சாகசத்தில் ஈடுப்பட்டனர். மேலும், அதனை வீடியோவாகவும் எடுத்து வந்துள்ளனர். அப்போது அந்த வழியே பெரோஸ் பதான் என்ற இளம்பெண் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

ரீல்ஸ் ஆர்வத்தில் அவர்கள் அந்த பெண்ணின் ஸ்கூட்டியில் தங்களின் இரு சக்கரவாகனத்தை மோதினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரீல்ஸ் மோகத்தால் பெண்ணின் உயிர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version