இளம் வயதிலேயே தலையில் நரை முடி என்ட்ரி கொடுத்து விட்டதா? இதை கருப்பாக மாற்ற 2 பொருட்கள் உதவும்!!
இன்றைய நாளில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை வெள்ளை நரை.குறிப்பாக 30 வயதிற்குள் இருக்கும் நபர்கள் தான் இளநரை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.இந்த இளநரையை இயற்கை முறையில் எவ்வாறு கருமையாக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)தேங்காய் துருவல் – 1/4 கப்
2)மூசாம்பரம் -1 கட்டி
வெள்ளை முடியை கருமையாக்கும் ஹேர்பேக் செய்முறை:-
தேங்காய் துருவல் கொண்டு 1/4 கப் அளவு தேங்காய் துருவிக் கொள்ளவும்.இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு வடி கொண்டு தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கட்டி மூசாம்பரம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைத்தாலே ஒரு கெட்டியான ஹேர்பேக் தயாராகி விடும்.
இந்த ஹேர்பேக் கெட்டியாக அடர் கருமை நிறத்தில் இருக்கும்.இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.இதை முடிகளின் வேர் பகுதியில் படும்படி தடவ வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலசிக் கொள்ளவும்.இவ்வாறு செய்தால் தலையில் உள்ள வெள்ளை முடி அடர் கருமையாகும்.