Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று முதல் ஜனவரி 17 வரை வேட்புமனு தாக்கல்!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

Filing of nominations in Erode by-election from today to January 17!!

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் மறைவுக்குப் பிறகு காலியாக உள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த தொகுதியில் ஜனவரி 10 முதல் ஜனவரி 17 வரை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுகளை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் ஆனது சில நாட்களுக்கு முன்பு பிப்ரவரி 5 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதனை ஒட்டி தற்பொழுது வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி ஆகிய இன்று வேட்பு மனு தாக்கல் செய்பவர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை ஜனவரி 17ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதற்கான வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனு தாக்கலை வாபஸ் வாங்குபவர்கள் ஜனவரி 20ஆம் தேதிக்குள் வாபஸ் பெற்று விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான ஓட்டு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு :-

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை :-

✓ ஆண்கள் – 1,09,636
✓ பெண்கள் – 1,16,760
✓ இரு பாலினத்தவர் – 37
✓ இதர வாக்காளர்கள் – 1570

✓ மொத்தம் – 2,26,433

Exit mobile version