உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

0
304
#image_title

உங்கள் முகம் கருப்பாக இருக்கிறது என்று வருத்தமா? அப்போ பேஸ் பேக் யூஸ் பண்ணுங்க!!

முகத்தில் கருமை,கரும் புள்ளிகள்,முகப்பருக்கள் இருந்தால் அவை முக அழகை கெடுத்துவிடும்.எனவே முகத்தை இயற்கையான முறையில் வெள்ளையாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை அவசியம் பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)முல்தானி மெட்டி – 2 தேக்கரண்டி
2)ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி
3)கற்றாழை ஜெல் – 1 தேக்கரண்டி
4)பால் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு துண்டு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து 2 தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி,ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஒரு தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்தவும்.

இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வந்தால் முக கருமை நீங்கி அதிக பொலிவாக காணப்படும்.