Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலுறவு செய்து முடித்த பின் ஏன் சோர்வு ஏற்படுகிறது… அதற்கான காரணங்கள் இதுதான்…!

உடலுறவு செய்து முடித்த பின் ஏன் சோர்வு ஏற்படுகிறது… அதற்கான காரணங்கள் இதுதான்…!

 

திருமணமாண தம்பதிகள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு அதிகம் தூக்கம் வரும். மேலும் அதிகம் சோர்வு ஏற்படும். அதற்கான காரணம் என்ன தூக்கம் மற்றும் சோர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 

நமது வாழ்வில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அதாவது திருமணமானவர்களின் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அவ்வாறு உடலுறவு கொண்ட பிறகு உடல் சோர்வு அடையும். மேலும் தூக்கம் வரும். அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாம்.

 

உடலுறவுக்கு பின்னர் தூக்கம் சோர்வு ஏற்படுவதற்கு காரணங்கள்…

 

* உடலுறவு கொள்ளும்பொழுது வெளியாகும் ஹார்மோன்கள் தூக்க உணர்வை கொடுக்கின்றது. அதாவது உடலுறவு கொள்ளும் பொழுது உடலில் ஆக்ஸிடாசின், எண்டொர்பின், டோபமைன் போன்ற ஹார்மோன்கள் வெளியேறுவதால் உடலுறவு முடிந்த பின்னர் தூக்கம் வருகின்றது.

 

* உடலுறவு கொள்ளும் பொழுது உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். இதனால் உடல் சோர்வு அடைகின்றது. உடலுறவு கொள்வது என்பது மிதமான இதமான உடற்பயிற்சி போன்ற ஒன்று. உடலுறவின் பொழுது ஆண்கள் 4.1 கலோரிகளையும் பெண்கள் 3.1 கலோரிகளையும் எரிக்கின்றனர். ஒரு திருமணமான தம்பதி உடலுறவு கொள்ளும் கால அளவு அதிகரித்தால் அது தீவிர உடற்பயிற்சி ஆகும். இதனால் தான் உடலுறவில் ஈடுபட்ட பிறகு உடல் சோர்வு அடைகின்றது.

 

* உடலுறவில் ஈடுபடும் பொழுது வியர்வை அதிகமாக வெளியேறுகின்றது. அதாவது உடலுறவின் பொழுது உடலில் உள்ள நீரின் அளவு குறைகின்றது. இதனால் உடல் சோர்வு அடைகின்றது.

 

இதை தடுப்பதற்கான சில வழிமுறைகள்…

 

* உடலுறவில் ஈடுபட்டு முடித்த பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும்.

 

* உடலுறவுக்கு பின்னர் உடலில் குறைந்த நீரின் அளவை அதிகரிக்க தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

 

* ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

 

* தினசரி எதாவது எளிமையான உடற்பயிற்சி செய்வது சிறந்த வழிமுறையாக இருக்கும்.

 

Exit mobile version