இந்த காலகட்டத்தில் பலரது அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்படுகிறது. அதற்கு காரணம் இந்த பாஸ்வேர்டுகள் என ஒரு ஆய்வில் வெளியிட்டுள்ளார்கள்.
இந்திய மட்டும் அல்லாமல் உலக அளவில் மிக எளிதான கடவுச்சொல் பயன்படுத்தப்படுவதால் எளிதில் ஹேக் செய்கின்றனர். இதில் NordPass நிறுவனம் ஆராய்ச்சியின் ஆறாவது பதிப்பில் 200 பொதுவான பாஸ்வேர்டுகளை கூறியுள்ளது. அந்த பாஸ்வேர்டுகள் 2024-ஆம் ஆண்டில் 44 நாடுகள் பயன்படுத்துகின்றன என அறிவித்துள்ளது. அந்த பாஸ்வேர்டு “123456” என்பது ஆகும். இந்த பாஸ்வேர்டை மொத்தமாக 3,018,050-இவ்வளவு பயனர்கள் பயன்படுத்தி உள்ளார்கள்.
இதில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 76,981 பேர் என அந்த ஆராய்ச்சியில் விளக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் உலக அளவில் 50 சதவீதம் கீபோர்டு சேர்க்கைகளை கொண்டு பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளில் “qwerty” மற்றும் “1q2w3e4er5t”, “123456789” என்பதை பயன்படுத்துகிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் மில்லியன் கணக்கான இணையதள பயனர்கள் “qwerty123” என்ற மிக எளிதாக கண்டுபிடிக்கும் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகிறார்கள். மேலும் இந்தியாவில் “Password” என்ற வார்த்தையை பாஸ்வேர்டாக வைத்துள்ளனர்.
இது இந்திய அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடமாக “123456789” என்ற பாஸ்வேர்டு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த வகையான பாஸ்வேர்டுகள் இந்தியாவில் மட்டும் அல்லாமல் நெதர்லாந்து, பின்லாந்து, கனடா, லிதுவேனியா ஆகிய நாடுகளிலும் இந்த பாஸ்வேர்டுகள் பொருந்தும்.
மேலும் அந்த ஆய்வில் இந்தியாவில் இணைய பயனாளர்கள் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் 20 கடவுச்சொல் இது தான், 123456, password, 12345678, 123456789, abcd1234, 12345, qwerty123, 1234567890, india123, 1qaz@wsx, qwerty1qwerty, 1234567, india123, Indya123, qwertyuiop, 111111, admin, abc123 இவை அனைத்தும் ஆகும். எனவே இந்த பாஸ்வேர்டுகள் ஹேக்செய்ய ஒரு நொடி கூட ஆகாது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.