உளவு பார்த்த ரஷ்ய அதிகாரிகள்? 50 தூதரக அதிகாரிகளை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றிய ஜோ பைடன்!

0
158

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 10 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் பலமுறை ரஷ்யாவிற்கு கோரிக்கை வைத்தும் ரஷ்ய அரசு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது மேலும் அந்த நாட்டின் பல முக்கிய நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றி இருக்கின்றது .

மேலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் கியூவை நோக்கி ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் ரஷியப் படைகளை தங்களுடைய முயற்சிகளால் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து தடுத்துவருகிறது.

இந்த நிலையில் ,ரஷ்யா உக்ரைன் நாட்டு எல்லையில் எப்போது தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தியதூ முதலே அப்போதிருந்தே அமெரிக்கா ரஷ்யாவிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அதோடு எப்போது வேண்டுமானாலும் போர் நடைபெறலாம் என்று எச்சரித்தும் வந்தது.

மேலும் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தது. அதனை மீறும் விதமாக கடந்த 24ஆம் தேதியும் உக்ரைன் மீதான போரை ஆரம்பித்தது.

இதனை தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது அதோடு இந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகளை அமெரிக்கா அணிதிரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான மோதல் முற்றி வருகிறது போரின் விளைவாக ஏற்பட்ட இந்த மோதல் ஒருபுறமிருக்க இரு நாடுகளுக்கும் இடையில் தூதரக ரீதியிலும் மோதல் வலுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இடத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கின்ற ஐநா தலைமையகத்தில் பணிபுரிந்து வரும் ரஷ்ய தூதரக அதிகாரிகள் பலர் அமெரிக்காவுக்கு எதிராக உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கிறது அதோடு இந்த முடிவு உள்ளிட்டவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ரஷ்யா அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனாலும் இதனை ஏற்க மறுத்த அமெரிக்க அரசு குற்றச்சாட்டுக்கு உள்ளான ரஷ்ய தூதரக அதிகாரிகள் அனைவரையும் மார்ச் மாதம் 7ஆம் தேதிக்குள் குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையகத்தில் பணிபுரிந்து வந்த ரஷ்ய தூதரக அதிகாரிகளும் மற்றும் அவர்களுடைய குடும்ப த்தைச் சார்ந்தவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை அமெரிக்காவிலுள்ள ரஷ்ய தூதரகம் செய்தது.

அதன்டிப்படையில் நேற்று 50 லட்சம் தூதர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 2 பேருந்துகள் மூலமாக நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்கள்.

அதன்பிறகு அங்கிருந்து ரஷ்ய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு தனி விமானத்தில் அவர்கள் எல்லோரும் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ புறப்பட்டார்கள் உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போருக்கிடையில் ஒரே நாளில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 50 பேர் குடும்பத்தினரோடு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.