Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சித் தேர்தலுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது ..நடவடிக்கை எடுக்க புகார் எண்கள் அறிவிப்பு.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிதுள்ளது.

அதனைத் தொடர்ந்து அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.ஒன்பது மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து போட்டியிடுகின்றனர் .

இந்நிலையில், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் லிங்கேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதி நடைபெற உள்ளதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தொழில் வணிக நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், ஹோட்டல்கள், பீடி சுருட்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை உள்ள அனைத்து நிறுவனங்களில் தற்காலிக, ஒப்பந்த மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.

அன்றைய தினம் விடுப்பு அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் அளிக்க தொழில்துறை தொழிலாளர் ஆணையர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேர்தல் நாளான 6 மற்றும் 9ம் தேதி ஆகிய இரு நாட்களிலும் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) லிங்கேஸ்வரன் (9778619552), தொழிலாளர் துணை ஆய்வர் கமலா (9952639441), தொழிலாளர் உதவி ஆய்வர் மாலா (9790566759), பரங்கிமலை தொழிலாளர் உதவி ஆய்வர் சிவசங்கரன் (94441 52829), காஞ்சிபுரம் முத்திரை ஆய்வர் வெங்கடாச்சலம் (9444062023)ஆகிய செல்போன் எண்களிலும் 044-27237010 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், பரங்கிமலை தொழிலாளர் துணை ஆய்வர் மனோஜ் ஷியாம் சங்கர் (8667570609), செங்கல்பட்டு தொழிலாளர் உதவி ஆய்வர் பிரபாகரன் (9944214854) மதுராந்தகம் தொழிலாளர் உதவி ஆய்வர் பொன்னிவளவன் (9789253419), தாம்பரம் தொழிலாளர் உதவி ஆய்வர் வெங்கடேசன் (8870599105), செங்கல்பட்டு முத்திரை ஆய்வர் சிவராஜ் (7904593421), பரங்கிமலை முத்திரை ஆய்வர் வேதநாயகி (9884264814) ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version