எச்சரிக்கை: ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் மறுத்தால் துறைரீதியான நடவடிக்கை!

0
90

ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களை கொரோனா தடுப்பு பணிக்காக அழைத்தால் மறுப்பு தெரிவிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

கொரோனா காலகட்டத்தில் அனைத்து செவிலியர்களும் மருத்துவர்களும் தங்களது பங்கினை ஆற்றி வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறை அதற்கு ஏற்றவாறு தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

கொரோனா பணிக்காக பள்ளிக் கல்வி துறையினரையும், உயர் கல்வி துறையினரையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

 

இதனால் இவர்களுக்கு கொரோனா தொகுப்பு சேகரிப்பு பணி மற்றும் பல கொரோனா கட்டுப்பாடு மையங்களில் பணிகள் போன்றவை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

பல இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஒதுக்கும் கொரோனா பணிக்காக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் மறுப்பு தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு தகவல் வந்த நிலையில் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்வி அலுவலர்களுக்கும், மீண்டும் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில், மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பு பணிக்காக அழைப்பு விடுத்தால் கல்வியாளர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள் அதனை மறுப்பு தெரிவிக்க கூடாது. அப்படி மறுப்பு தெரிவித்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது.