Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி

எனது மனைவி இப்படித்தான் இருப்பார்!- மனம் திறந்த ராகுல் காந்தி

தனது மனைவி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் நீங்கள் உங்கள் பாட்டி இந்திரா காந்தியைப் போன்ற பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வீர்களா?என கேள்வி எழுப்பப்பட்டது.

நான் திருமணம் செய்யும் பெண் எனது பாட்டி மற்றும் எனது அம்மா இந்திரா சோனியா இருவரின் குணநலன்களையும் பெற்று இருப்பது நல்லது. எனக்கு எனது தாயை மிகவும் பிடிக்கும். அதே போல் எனது பாட்டி இந்திராவையும் நான் இன்னொரு அன்னையாக நினைக்கிறேன். எனவே என்னை திருமணம் செய்யும் பெண் எனது தாய் மற்றும் பாட்டியின் குணநலங்களை பெற்றிருந்தால் நல்லது.

மேலும் அவர் கூறுகையில் என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஆனால் காரைவிட எனக்கு பைக் ஓட்ட மிகவும் பிடிக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக் ஓட்டியுள்ளேன். அவை இரண்டும் சீன தயாரிப்பு இருப்பினும் நன்றாக இருந்தன. இந்தியாவின் பழைய வாகனமான லாம்ப்ரட்டா எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவில் மின்னணு வாகனங்கள் குறித்து நிறைய பேசினாலும் அவை குறித்த புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும் அவரைப் பற்றி வரும் விமர்சனங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, என்னை பல்வேறு வகையில் விமர்சனங்கள் செய்கின்றார்கள். எனக்கு பலவித பெயர்கள் வைக்கிறார்கள். என்னை பப்பு என்று அழைப்பதால் எனக்கு கவலை இல்லை என்னை எப்படி வேண்டுமானாலும் அழையுங்கள். என்ன பெயர் வேண்டுமானாலும் சூட்டுங்கள்.

அவர்கள் உள்ளத்தில் உள்ள அச்சத்தினால் அவ்வாறு அழைக்கிறார்கள் என்னை அடித்தாலும் கூட நான் அவர்களை வெறுக்க மாட்டேன். எனக்கு எவ்வளவு பெயர்கள் சூட்டினாலும் நான் சலனமற்று இருப்பேன்.என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Exit mobile version